இவ்வளவு நாட்களுக்கு பிறகும்
இத்தனை நடந்தும் கூட
உன் மீது நான் கொண்ட அன்பை
எனக்கு வெளிப்படுத்தத் தெரியாமல் இல்லை
வெளிப்படுத்தக் கூடாது என்று இருக்கிறேன்!
ஏனென்றால்
என் அன்பு உங்களால் மதிக்கப்பட வேண்டாம்
உங்களால் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டாம்
ஏன் இன்னும் சொல்லப் போனால்
உங்கள் செவிகளைச் சாய்த்து
கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லை!
ஆனாலும் கூட
அதன் மதிப்பு தெரியாத யாரோ ஒருவரால்
என் அன்பு வெறுத்து ஒதுக்கித் தள்ளப் படுவதை
நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை!
அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!