அன்பு – கவிதை

ஓசையில்லா மனதில்
ஊடுருவும் அன்பு !

ஒருவரிடம் சொல்லி
வருவதில்லை அன்பு !

மனதால் உணர வைப்பதே
நிகரில்லா அன்பு !

மருந்தாகக் காயத்தைக்
குணப்படுத்தும் அன்பு !

பிறர் துடிப்பினால் மட்டுமே
உணர முடியும் அன்பு !

பிரதிபலன் பாராதது
எல்லையில்லா அன்பு !

மொழிகள் இன்றியும்
வெளிப்படும் அன்பு!

நிழல் போலத் தொடரும்
நிஜமான அன்பு !

அர்த்தமுள்ள இலக்கணமாய்
திகழ்கிறது நம் அன்பு !

கூண்டில் அடைக்க முடியா இவ்வன்பு
வாழ்க வழி வழியே…

தமிழ்த்தேனீ

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.