அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!
அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!
முந்திவந்து நமை காப்பான் மூஞ்சூரு வாகனன்
வந்தவினை போக்கிடுவான் மோதகத்து மோகனன்!
கவி எடுத்துக் கொடுப்பானே கஜமுகத்து நாயகன்
புவிகாக்க பிறந்தவனே புத்திதரும் தூயவன்!
சாணத்தையும் பிடித்து வைக்க சங்கரன் மகன் தெரிவான்!
ஞானத்தையும் வாரிவாரி நாளும் நமக்கு தருவான்!
நற்பொருளை நலமுடனே வாரித்தரும் வள்ளல்!
பொற்பதத்தை பணிந்து விட பொசுங்கிவிடும் அல்லல்!
தும்பிக்கை துணையிருக்க தொடர்ந்திடுமா பஞ்சம்!
அம்பிகையின் மைந்தன் தன்னை அடைந்திடுவோம் தஞ்சம்!
எத்திக்கும் தித்திக்கும் சேதிசொல்லும் முதல்வன் !
பித்தனென்று பேரு பெற்ற பிறைசூடனின் புதல்வன்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com