ஆசைகளுக்குத் தாழிடவே
மனது விரும்பிடாதே!
எதையாவது அடைந்திடத் துடிக்கும்
அடைந்த பின் அடுத்ததை
நோக்கி ஓடும்
ஆசை சிலருக்கு
பேராசையாய் மாறும்
ஆசை சிலருக்கு
நிராசையாய் மாறும்
ஆசை சிலருக்கு
சாதனையாய் மாறும்
அனைவருக்கும் ஆசை
இல்லாமல் இல்லை…
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கரூர்
கைபேசி: 9500421246