இறகுகள் இல்லாத பறவை போல
உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை
தந்தை அன்பும் கிடைத்ததில்லை
அவமானங்களை சந்திக்கும் நானே
குப்பைத் தொட்டிகள் பெற்றெடுத்த
குப்பை தானே…
தமிழ் வழியிலே கல்வி
அள்ளித் தந்தது என் அரசுப் பள்ளி
ஆங்கிலத்திலோ அத்தனை பிழையில்
தேர்ச்சியும் பெற்றேன் நூலிழையில்
தப்பித்துப் பிழைத்தேன் பள்ளியிலே
சிக்கித் தவிக்கின்றேன் கல்லூரியிலே
இறகுகள் இல்லாத பறவை போல
இப்படிக்கு கல்லூரி முதலாமாண்டு மாணவன்
மா.குணசீலன்
மதுரை மருத்துவ கல்லூரி
மதுரை – 625020
கைபேசி: 6382512539
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!