உணர்வற்றுப் போயினரே! – கவிதை

அரிச்சந்திரன் வாழ்ந்த மண்ணில் இன்று

ஆண்ட்ராய்டு மட்டுமே அரிச்சந்திரன்

துரியோதனன் காட்டிய நட்பு இன்று

துரிதமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் மட்டுமே

கர்ணன் வாழ்ந்த இம்மண்ணில் இன்று

கூகுள் பே போன் பே …

அகத்தில் ஆயிரம் துன்பம் வந்தாலும்

முகத்தில் காட்டாமல் இருப்பது

உன்னத நிலை என்பது மாறிப்போய்

அகத்தைப் புறமாக்கிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

பண்பாடு என்பது நூலில் ஓங்கிய நிலை அன்று

ஒரு நொடியில் ஷேர் செய்ய மட்டுமே இன்று

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு புகட்டும்

பாடங்கள் மனதைப் பண்படுத்தியது அன்று

பார்வர்ட் செய்தியாய் மட்டுமே அவை இன்று

காதல் என்பது காவியம் ஆன நிலை அன்று

காட்சிப் பொருளாய் ஸ்மைலிகளாய் இன்று

முகம் பார்த்து புன்னகை பூத்தோம் அன்று

மொபைல் பார்த்து கண்கள் பூக்கின்றன இன்று

பேசாப் புல் பூண்டுகள் கூடப்

பேசுவது போல் கிளர்ந்த எம் மண்ணில்

பேசிச் சிரிக்க வேண்டிய மக்கள் இன்று

பேசாப் புல் பூண்டுகளைப் போல்

உணர்வற்றுப் போயினரே!

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.