திறக்கையில் நுழைந்து விடுகிறது
சாளரத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த காற்று …
விழாமல் விழும் நிலையிலிருந்து
விழுந்த பூக்களால் கலங்கும்
சுமந்து செல்கிறது வலுத்த காற்று …
அனல் கலந்து ஆட்டம் போட்டும் வெக்கையை
பக்குவமாகவே கொத்தி செல்கிறது கோடைக்காற்று…
ஈர பிசுபிசுப்பை இயல்பாய்த் தடவி
உடலின் கதகதப்பை யெல்லாம்
தின்று விட்டுப் போகிறது பனிக்காற்று…
நீ விரல் தீண்ட ஊடுருவி
உள்ளத்தை சிலிர்ப்பூட்டுவதாய்
உரசிக் கொண்டோடுகிறது
அந்த சாரல் காற்றும்…

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250