பண்டைப் புகழ் பேசித் திரியாதே! என்பார்
கிடைத்த தமிழ்ப் பொன் கருவூலத்தைப்
பேசாத வாய் வாயா?
கேளாத செவி செவியா?
நினையாச் சிந்தை சிந்தையா?
பழமை என்போர்க்கு நீ கடிந்துரை
முதிய அரிமா காட்டுக்கரசன்!
முந்தை மொழி எங்கள் தமிழ்
வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை!
வடவர் கலந்த கலப்புகளைக் களைவதே
கன்னித் தமிழைக் காக்கும் தமிழர்க்குக் கடமை!
வெளியார் பேச்சைக் கேட்டு நம் பெருமைகளை
வீதியிலே வீசியெறிந்து விளையாடுவது மடமை!
பழந்தமிழ் வரலாற்றைப் புது இணையத்திலே ஏற்றி
மெய்யுரைத்து பொய்யகற்றி வாழ்வதே நம் உரிமை!
அகத்தின் அன்பும் புறத்தின் மறமும்
அறத்தின் அழகும் மாறா மரபுத் தமிழனின் வலிமை!
அறமே வாழ்வென்ற வள்ளுவப் பரம்பரை
வழி வந்த நமக்கே இனிப் பாரெங்கும் இனிமை!
கவிமாமணி நா.கனகராஜ் எம்.ஏ., பி.எட்.
வத்திறாயிருப்பு
கைபேசி: 8072880945
நன்றிகள் ஐயா!
🙏