உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது
உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது
உனக்கு என்னை வருணிக்கத் தெரியாது – ஆனால்
எனக்கு உன்னை வருடாமல் வாழ முடியாது
கேட்காமல் எதுவும் நீ செய்ததில்லை – ஆனால்
கேட்டு எதையும் நான் பெற்றதில்லை
உன்னிடம் ஒளிவு மறைவு இல்லாமல் இல்லை – ஆனாலும்
உன்னிடம் ஓடி ஒளியும் பாங்கு என்னிடமில்லை
கண்டால் வரும் காமம் நீ
காணாது வரும் காதல் நான்
உண்ணும் போது ஊட்டியதில்லை
உறவுகளின் முன் உயர்த்தியதில்லை – ஆனாலும்
நீ எண்ணியபோது உன்னை நான் வாட்டியதில்லை
என்னை நேசித்தால் உன்னை நேசிப்பேன் என்று கூற
நான் உந்தன் காதலி அல்ல…
நீ கரம் பிடித்துக் கட்டிய மனைவி!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!