தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என திருவள்ளுவர் சொல்கிறார்.
அதாவது உலகில் தாவரம் முதல் புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் முதலிய எல்லாவற்றையும் படிப்படியாய் இறைவன் படைத்தான்.
பறவைகள், விலங்குகளுக்கு ஐந்து அறிவைக் கொடுத்தான். மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவைக் கொடுத்தான்.
சிந்தித்து செயல்பட்டு எந்த உயிருக்கும் கெடுதல் செய்யாமல் வாழ்ந்து விட்டு, நம்மிடம் இருப்பதைக் கொஞ்சம் இல்லாதவர்களுக்குத் தருமம் செய்துவிட்டுச் செல்லுங்கள் என்கிறார்கள் நமது முன்னோர்கள்.
பூமியில் வாழ்கின்ற அத்தனை உயிர்களும் செழித்து வாழ வேண்டும் என்பதற்காக தான் அவ்வப்போது மழை பொழிகிறது. அதற்காக நாம் கைமாறு ஏதாவது செய்கிறோமா? இல்லை.
மேலும் வெயில் காலமும் குளிர்காலமும் மாறி மாறி வருகிறது. அதற்காக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் சூரியனையும் சுற்றிக் கொண்டும் ஆறு மாதங்கள் வடக்காகவும், 6 மாதங்கள் தெற்காகவும் நகர்ந்து நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நன்மை செய்கிறது.
அதற்காக நாம் ஏதாவது கைமாறு செய்கிறோமா என்றால் ஒன்றும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அதனால்தான் ஆதிகால மனிதன் முதல் தற்போது வரை முதல் கடவுளாகிய சூரியபகவானை வணங்கிக் கொண்டு வருகிறோம்.
எப்படி பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மழைபெய்தும், வெயில் அடித்தும் சூரியன் நன்மை செய்கிறதோ அதே மாதிரி நாமும் நம்மால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கும் பிற உயிர்களுக்கும் உதவி செய்து வாழ வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!