காலங்கள் மாறினாலும்
காயங்கள் மாறவில்லை
கற்றுக்கொண்ட பாடங்கள்
கற்பித்தும் பயனில்லை
சொல்லித்தர ஆளிருந்தும்
சொற்கேட்க ஆளில்லை
ஆளாத துறையுமில்லை
ஆனாலும் அறிவில்லை
ஆயுள் வரை சிலரிடம்
ஆதிகுணம் மறைவதில்லை
பாதியில் வந்ததாலோ
பத்தினியும் பாரமாமோ
பற்றவைத்த நெருப்பெல்லாம்
பத்திரமாய் வாழ்ந்திடுதே
சுற்றம் போற்றும் நினைவெல்லாம்
சுத்தமாக தாழ்ந்திடுதே
நல்லோர் போல் நடிப்பதிலே
நாளும் இங்கே கரைந்திடுதே
செம்புலப் பெயல் நீர் மேடையிலே
ஆதிக்கம் செலுத்துவதோ ஆண்மையிலே
உண்மையில் உண்மை ஏதுமில்லை
வன்மையில் நன்மை வாய்ப்பதில்லை
தண்மையில் தன்னிறைவு வருவதில்லை
வறுமையில் உணர்வுகள் மாய்வதில்லை
சுகன்யா முத்துசாமி