கடவுள் யார்? எப்படி இருக்கிறார்?

கடவுள் யார்? எப்படி இருக்கிறார்?

கடவுள் யார்? எப்படி இருக்கிறார்? இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் ஓடுகிறது.

கொஞ்சம் சிந்தித்தால் கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்பதை உணர முடியும்.

மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், மரங்கள் என எல்லாவற்றிலும் கண்களுக்குத் தெரியாமல் கடவுள் இருக்கிறார்.

கடவுளின் உருவம் கருப்பா அல்லது சிகப்பா? அவர் குட்டையா அல்லது நெட்டையா? யார் பார்த்தது? யாரும் பார்க்கவில்லை.

விநாயகராகவும், முருகனாகவும், சிவனாகவும், பெருமாளாகவும், ஐப்பனாகவும், காளியம்மனாகவும், மாரியம்மனாகவும், மகாலட்சுமியாகவும், மீனாட்சியாகவும், விசாலாட்சியாகவும், பகவதி அம்மனாகவும் எனப் பலப் பல பெயர்கள் சொல்லி கடவுளுக்கு விழா எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் நாம்.

இயற்கை தான் மொத்தத்தில் கடவுள். அவர் தூசிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற பழமொழியும் அதனால்தான் வந்தது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது.

நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, மண் என பூமியில் ஐந்து பூதங்களும் அடங்கியிருக்கிறன்றன.

திருவானைக்காவலில் உள்ள லிங்கத்தினை தண்ணீராகவும்,

திருவண்ணாமலையில் உள்ள லிங்கத்தினை நெருப்பாகவும்,

சிதம்பரத்தில் உள்ள லிங்கத்தினை ஆகாயம் அதாவது வெட்ட வெளியாகவும்,

காஞ்சிபுரம் ஏகாம்பர ஈஸ்வர் கோவிலில் உள்ள லிங்கத்தினை மண்ணாகவும்,

ஆந்திராவின் காளகஸ்தி கோவிலில் உள்ள லிங்கத்தினை காற்றாகவும் எண்ணி மக்கள் வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

எல்லா லிங்கத்திற்கும் கடவுள் சிவபெருமானே என சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்போதும், குளங்களில் நீர் இல்லாமல் இருக்கும்போதும் மழை திடீரென பெய்தால் நாம் என்ன சொல்கிறோம். ‘தக்க சமயத்தில் கடவுள் கண் திறந்து பார்த்து மழை பெய்யச் செய்து காப்பாற்றினார்’ என்கிறோம்.

குளிர் காலத்தில் விடாமல் சாரல் மழை பெய்தால் ‘எப்போது மழை விடும்’ என்று சொல்லியும் ‘எப்போது வெயில் அடிக்கும்’ என்று சொல்லியும் சூரிய பகவானை எல்லோரும் வணங்குகிறோம்.

கோடை காலத்தில் மரங்களின் நிழல்களில் தங்கும் போது இதமான காற்று அடித்தால் ‘கடவுளே’ என்று சொல்கிறோம்.

ஆகவே எல்லா நேரங்களிலும் நாம் கடவுளைதான் வணங்குகிறோம். கடவுள் யார்? எல்லாமே அவர் தான்.

கடவுளுக்கு எந்த உருவமும் கிடையாது. இயற்கை தான் கடவுள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சங்கரன் கோவிலில் ஒரே உருவத்தின் இடப்பக்கத்தில் பெருமாள் ஆகவும், வலது பாதியில் சங்கரனாகவும் இருக்கிறார்.

ஆகையால் ஆண்டவனை எந்த உருவத்தில் வைத்து கும்பிட்டாலும் ஒன்று தான். கடவுள் உருவமற்றவர் என்பதை முதலில் தெரிந்து வாழ்ந்தால் யாரிடமும் ஏமாறாமல் இருப்போம்.

Visited 1 times, 1 visit(s) today

Comments

“கடவுள் யார்? எப்படி இருக்கிறார்?” மீது ஒரு மறுமொழி

  1. பாரதி சந்திரன்

    கட்டுரை ஆசிரியரும் கடவுள் போல் மறைந்தே காணப்படுகிறார்.

    அருமையான சிந்தனை. வாழ்க வளர்க!

    உண்மையை தேடும் மாபெரும் வாழ்க்கை பயணம் தான் ஆன்மீகம்.

    ஆனால் இன்று இருக்கும் குறை வழிபாடுகள் ஆன்மிகம் அல்ல என்பதை அறிவு நமக்கு கூற வேண்டும்.