கழைக்கூத்தாடி – கவிதை

வேடிக்கை பார்ப்போர்
தரும் நாணயங்களுக்கு
மனம் கல்லாக
உடல் வில்லாக
வளைத்து சாகசம்
புரிந்திடும் நாணயமான
கழைக்கூத்தாடி!

சுகதுக்கம் கொண்டாட
கட்டாந்தரையும்
சொந்தமில்லை
ஆனால்
பஞ்ச பூதங்களையும் தன்
சொந்தங்களாகக் கொண்ட
கழைக்கூத்தாடி!

முதல் போட்டு வருமானம்
பார்த்திடும் வியாபாரி அல்ல
கரணம் தப்பினால்
மரணம் பார்த்திடும்
கழைக்கூத்தாடி!

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.