காரில் ஏறியதும் ஏசி போடாதீர்கள்; ஏன்?

பொதுவாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காரில் ஏறியதும் காரின் ஜன்னல்களை மூடிவிட்டு ஏசி (ஏர் கண்டிஷனர்) போடுவதை வழக்கமாக நம்மில் பலர் கொண்டுள்ளனர்.

ஏர் கண்டிஷனர் உள்ள‌ காரை பயன்படுத்தும் போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் ஏர் கண்டிஷனரை இயக்கி ஜன்னலை மூடக்கூடாது.

 

காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் ஏசியை (ஏர் கண்டிஷனரை) இயக்க வேண்டும்.

 

காரில் ஏறியதும் காரின் ஜன்னல்களை மூடிவிட்டு ஏர் கண்டிஷனர் போடுவதால் ஏற்படும் தீமைகளை ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏர் கண்டிஷனர் உள்ள‌ காரை பயன்படுத்தும் போது காருக்குள் நுழைந்தவுடன் ஏர் கண்டிஷனரை இயக்கி ஜன்னலை மூடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.

ஆராய்ச்சி முடிவுகள் பல அதிர்ச்சி உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளன‌.

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் ஆகும்.

வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம்.

இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.

இதனால் புற்றுநோய்கள் உள்ளிட்ட உயிரினை அச்சுறுத்தும் நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைத்து பின்னர் ஏர் கண்டிஷனரை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு வாழுங்கள்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.