உயிருக்கு உத்திரவாதமில்லா
உத்தியோகம்…
ஊரைக் காக்கும் காவலரின்
உன்னதத் தியாகம்!
சீருடைப் பணியாளர்
சிரம் தாழா நேர்மையாளர்
சட்டம் ஒழுங்கு பேணிக்காக்கும்
நோட்டமிடலில் கெட்டிக்காரர்!
போலீஸ் லத்திக்கும்
புத்திக் கூர்மையிருக்கும்
காக்கி உடுப்புக்கும்
வேவு பார்க்கும் யுக்தியிருக்கும்!
காவல் துறை
மக்களை அல்லும் பகலும்
கண்காணித்துப் பாதுகாக்கும்
கட்டுப்பாட்டறை!
காக்கிச் சட்டை
காவல் கோட்டை
காவாளியரை கைது செய்ய
தேடுதல் வேட்டை!
துக்கம் மறந்து தவிப்பாம்
பணிச்சுமையால்…
தூக்கம் துறந்த காவலருக்கும்
ஏக்கப் பெருமூச்சு விடுப்பாம்!
கஞ்சி போட்டுத் துவைத்த
காக்கிச் சட்டை
கயவருக்கும் அஞ்சி நடுங்கா
இராஜபாட்டை!
மழையோ… வெயிலோ…
கால்கடுக்கப் பணி செய்வதே
கடமை தவறாத
காவலரின் நிலையோ!
காவலரை விதி மிரட்டும்
மன அழுத்தம் பயமுறுத்தும்
கடமையுணர்வோடு போராடும்
காவலரை மதி வழிநடத்தும்!
காக்கித் தொப்பியில்
கிரீடம் அணிந்த சிங்கம்
தோள்பட்டை நட்சத்திரம்
காக்கும் கடவுளின் அங்கம்!
குற்றச் செயல் தடுக்கும்
குலசாமி போலீஸ்!
மற்ற சம்பவங்களை
இலகுவாகக் கையாளும் வால்டர்ஸ்!

கவிஞர் ச.வே. நிசப்தன்
11/35, D. காஜாதெரு (MK புரம்)
மதுரை – 625011
கைப்பேசி: 7603945240