ஆதங்கம்
கதாநாயகன் சண்டைக் காட்சியில்
தடாலடியாக அடித்துக் கொன்ற
பச்சை சட்டை அண்ணனின்
குடும்பத்தை எண்ணி!
கேள்வி
நான் நேற்றுப் படித்து மூடிய புத்தகத்தில்
என்னுடன் ஒரு மாத காலமாய் வாழ்ந்து
கொண்டிருந்த நாயகனும் நாயகியும்
இன்று என்ன செய்கிறார்கள்?
குழந்தைகள்
பிரதமராக இருந்தாலும்
பிச்சைக்காரனாக இருந்தாலும்
குழந்தைகள் முன் சமமே!
க.சஞ்ஜெய்
சென்னை
7904308768