சகுன(ண)ப் பெண்!

தீப விளக்கை ஏற்றி
வணங்கிக் கொண்டிருந்தாள்
தீபம் அணைந்து போனது!
ஜன்னல் திறந்திருந்தது

பாத்திரத்தை எடுத்து
பாலைக் காய்ச்சினாள்
பால் திரிந்து போனது
பாத்திரம் சரியாகக் கழுவவில்லை!

செருப்பைப் போட்டு
வெளியே கிளம்பினாள்
செல்லும் முன் அறுந்து போனது!
பழைய செருப்பு

வெறும் குடத்தோடு
வீதியில் வந்து கொண்டிருந்தான்!
அவனைப் பார்த்துத் தலையைக்
குனிந்து கொண்டாள்!
இழவு வீட்டுக்காரர்கள்
வெறும் குடத்தோடு
செல்வார்கள் என்பதால்!

பூனை சாலையை கடந்து
இரை தேடப் போனது!
சற்று நேரம்
அப்படியே நின்று விட்டாள்!
பூனை குறுக்கே சென்றால்
காரியம் விளங்காது என்பதால்!

வீதியில் நடந்து போனாள்!
விதவை எதிரே வந்தாள்!
சகுனமே சரியில்லை என்று
வந்த வழியே வீட்டை
நோக்கிச் சென்றாள்!

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
ஆத்திப்பட்டி, செம்பட்டி அஞ்சல்,
அருப்புக்கோட்டை – 626 101
கைபேசி:  9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com