சாதி
இளைய சமுதாயத்தினரால்
வேரறுக்கப்பட வேண்டிய
ஒரு ஆலமரம்!
சாதி
அன்று தொடங்கி
இன்று வரை தொடரும்
ஒரு சாபக்கேடு!
சாதி
சமத்துவத்தை சீர்குலைக்கும்
ஒரு சனி!
சாதி
காதலை பிரிக்கும்
ஒரு காட்டாறு!
சாதியை ஒழிக்கும்
சந்ததியாக இருப்போம்!
வா நண்பா போராடலாம்;
முடிந்தால் வெற்றி பெறலாம்;
முடியாவிட்டால் முயற்சிக்கலாம்!
ஜெய்ஹிந்த்!
– J. Winston Jebaraj M.Sc (CS & IT)
ANJA College, Sivakasi
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!