பரந்து விரிந்த பூமியில்
பாசத்திற்குப் பயனில்லை
காசு மட்டும் கையில் இருந்தால்
காண்பவரும் சொந்த நிலை
உன்னை எடுத்துரைக்க
உண்மைக்கு வழி இல்லை
உயிராய் உள்ள சொந்தம் கூட
நிரந்தரமாக நிலை இல்லை
என்ன இது வாழ்க்கை என்று
என்னைப் படைத்தவனிடம் முறையிட்டேன்
பூமி வந்து வாழ்ந்து பாரு
உண்மை புரியும் உனக்கு என்றேன்
அவன் சொன்னான்
கண்கலங்கி தடுமாறி
நீ நிற்கும் வேளையில் தாங்கியது
என் கையே!
சோகம் வேண்டாம்
சொந்தமாய் என்றும் இருப்பேன்
கடவுள் நானே,..