கசடுகள் நிறைந்த குமுறல்கள்!
கலைந்த மெளனத்தின்
ஆக்கிரமிப்புக்கள்!
தடுக்க முடியாத உச்சிக்கால
வெயில் போல் கவனத்தின்
மீதான சிதறல்கள்!
சொல்லின் திரிபுகள்!
ஆட்டிப்படைக்கின்ற திணறடிப்புக்கள்
அதிகபட்சமாக வெக்கையான முனகல்கள்
அடைக்கலம் கேட்கின்றன
செயற்கரிய செயல் செய்துவிட்டதாக!
செல்மா மீரா