தனிமைக்குத்
துணையானாய்
பலரின் வெற்றிக்குக்
காரணியானாய்!
மௌனமொழியே
நமக்கான
பரிபாஷையானதே!
மலர்களின்
வாசத்தைவிட,
அதிகம்
சுவாசித்தது
உன் வாசமே!
விழிகளால்
உனை பருகுகையில்…
எம்மில் நீ
விரிய விட்ட
கற்பனைகளும்…
அதில் பதிந்து
போன காட்சிகளும்…
என்றும் சாகாவரமே!
யாசிப்பது கூட குற்றமில்லை
புத்தக வாசிப்பு
பழகியோனுக்கு!
நான்
நேசிக்கும் புத்தகமே
என்
தனிமைக்கு
நீ
துணையானாய்!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!