தனிமையே நிஜம் ‍- கவிதை

பூக்களை சுற்றும் வண்டுகளைக் கேட்டுப்
பூப்பதில்லை செடிகள்

வாசமிழந்தால் வண்டுகள் பூக்களை வட்டமிடுவதில்லை
பூவுலகில் யார் அனுமதி கேட்டும் நீ பிறக்கவில்லை

நகையற்ற நரனை யாரும் நேசம் கொள்வதில்லை
என்றும் புன்னகையுடன் இரு
தனிமையே நிஜம்

ஒன்றையொன்று ஒத்தவையல்ல முளைக்கும் செடிகள்
ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்ட உயிர்கள்
நீயும் தனித்தவனே

தனித்தன்மை கொண்டவன் நீ
தன்னிலையில் தனித்திரு
தனிமையே நிஜம்

அழுத்தம் கொண்ட ஆழ்கடல் அமைதி கொள்ளும்
ஆழ்ந்த சிந்தனையில் அமைதி கொள்
தனிமையே நிஜம்

சிந்தனையில் சிகரம் கொள்
ஆயிரம் படை கொண்டவன் ஆயினும்
அமரர் ஆன பின் தனித்தவனே
தனிமையே நிஜம்

எதுவும் நிரந்தரமில்லை
நினைவில் கொள்

சதிஷ்

அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
கைபேசி: 8438574188

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.