கண்டதும் காதல்
கருத்தினில் மோதல்
வந்ததும் கூடல்
சென்றதும் மோதல்
அன்பினால் அடிமை ஆக்கி
அன்பிற்காக அடிமை ஆனவளே
அன்பிற்கும் அடிமைக்கும் வேறுபாடு கூட தெரியாமல் தவிப்பவளே
தமிழ் மகளே..
தன்னலம் அற்றவள் நீ
தரணி போற்றும் தாரகை நீ
இயற்கை படைப்புகள் அனைத்தும் நீ
ஈன்றெடுக்கும் தெய்வமும் நீ
உறவினர் போற்றும் உன்னதம் நீ
ஊரே வணங்கும் அம்மனும் நீ
ஏழுலகும் போற்றும் உமையாளும் நீ
இப்படி போற்றி போற்றியே
இன்று போதைப் பொருளாய்
போக நுகர்வாய்
கேளவும் சகியாத நிலையாய் ஆனதெப்படி?
தமிழ் மகளே….
மறுமொழி இடவும்