தாம்பத்தியம் – கவிதை

உனக்கும்

எனக்குமான சின்னஞ்சிறு

இடைவெளியில்

ப்ரியத்தின் ஆக்ரமிப்பால்

கோபங்களும்

வெறுப்புகளும்

பலியிடப்பட்டன…

வயோதிகம் வந்த பின்பும்

தொடர்ந்த காதலால்

ஆசை அறுபது நாள்

மோகம் முப்பது நாள்

பழமொழியும்

பொய்யாக்கப்பட்டன…

தளர்ந்து போன நடை யிலும்

துவண்டு போகாத

நம்

ஆத்மார்த்த பிணைப்பு

உண்மை யான

தாம்பத்யத்தின்

உயிலாக எழுதப்பட்டன…

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி