அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை
தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை
அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்
களை எடுத்துக் கல்வி கொடுத்தாய்
ரேகை தேய வீட்டு வேலை செய்தாய்
உன் உணவை எனக்கு அளித்தாய்
கந்தலுடை நீ உடுத்திக் காட்டன் உடை
எனக்கு வாங்கித் தந்தாய்
நான் கண்ணீர் விடும் முன்னே
கலங்கி வந்து நிற்பாய்
நீ இருக்கும் போது உன் அருமை அறியேன் அம்மா
நல்ல நாள் பெரிய நாள் நீ இன்றி வாடுகின்றேன்
சுயநலம் மிக்க சொந்தங்கள் மத்தியில்
உன் அருமை அறிந்து கொண்டேன்
நீ இருக்கும் போது உனக்கு உணவளிக்க மறந்து
இன்று காக்கைக்கு உணவளித்துக்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
நீ இல்லா உலகில் நீ இருக்கும் இடத்தைத் தேடி அலைகிறேன்
நீ இல்லா உலகில் வாழும் வாழ்க்கை விதை இல்லா
நிலத்தில் பயிர் செய்யும் வாழ்க்கை அம்மா
காற்றாகக் கலந்தாயோ கடவுளாய் ஆனாயோ
வாய்ப்பு இருந்தால் வந்து விடு
என்னுடனே என்றும் வாழ்ந்து விடு
வாழ்நாள் முழுவதும் உனக்குப் பணிவிடை
செய்யக் காத்திருக்கிறேன் கண்ணீரோடு
அம்மா அம்மா வந்திரு அம்மா
அருமை. வாழ்த்துக்கள்.