திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்

காலந்தோறும் வகுக்கப் பெற்ற ஒட்டு மொத்த எண்ணப் பிழிவுகளும் அதன் உண்மைத் தன்மையும், பிற உயிர்களின் மேன்மைக்கும் வாழ்க்கைத் தீர்வுகளுக்கும் எவ்விதமாய் அடித்தளமாக இருக்கின்றன என்பதே அற இலக்கிய வரலாறாக இருக்கின்றது.

இதுவரை எழுதப் பெற்றவைகளும் கருத்துகளாகக் கூறப்பெற்ற உண்மைகளனைத்தும், வாழ்வில் கோட்பாடுகளாக மாறி, கடைபிடிக்க வேண்டிய தத்துவங்களாக பிற்காலத்தில் வெளிப்பட்டு நிற்கின்றன.

திருக்குறள் நூல் காலங்களால் சுருக்கிவிட முடியாத, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அனைத்துக் காலங்களிலும் அனைத்துத் தருணங்களிலும் ஒத்திசைவோடு, தத்துவங்களைத் தந்து, நம் ஜீவனை மறுதலித்துப் போய்விடாமல், ஒன்றி உறவாடும் ஜீவமதுரமாம் கருத்துகளால் முன்னிற்கும் பெருமைக்குரிய நூலாகத் திகழ்கிறது.

அது உயிர்களின் பக்குவப்படலையும் உடல் குறித்த அறிவியல் தன்மையினையும் உலக நியதிகளையும் தத்துவார்த்த விசாரணைகளையும் முன் வைக்கின்றது.

வேதாந்த நூல்களும் மேற்கண்டவாறு உலக உயிர்களுக்கான வாழ்வியல் நியதிகளை, உலகியல் நடத்தைகளின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்றன.

இவ்வாறு தமிழில் வேதாந்த நூல்கள் எழுதிய வேதாந்திகளில் செங்கோட்டை ஆவுடையக்காவும் ஒருவர். அவர் எழுதிய நூல்கள் ஆய்வுக்கு ஒப்பீட்டளவில் எடுத்துக் கொள்ளப் பெறுகின்றன.

திருக்குறள் மற்றும் வேதாந்த நூல்களின் கருத்துக்கள் ஒத்த வடிவம் கொண்ட்டுள்ளனவா?

அல்லது மாறியும் திரிந்தும் எழுதப் பெற்றுள்ளனவா? என்பதை ஆய்ந்தறிந்து கூறுவது இக்கட்டுரையின் மைய நோக்கமாகும்.

திருக்குறள் அறம் சார்ந்த உலகம் முழுமைக்குமான பொதுமை நூல். அதுபோல், வேதாந்த நூல்களும் தத்துவத்துடன் உலக அறம் தாங்கி நிற்கும் பொதுமை நூல்களாக விளங்குகின்றன.

மானுட சமூகத்தின் ஒழுக்கப்பாடுகளை மேம்படுத்தும் தன்மையை இவையிரண்டும் முழுவீரியத்துடன் செயல்படுத்துதலை ஒப்புமைப்படுத்திக் காணலாம்.

வேதாந்த நூல்களில், செங்கோட்டை ஆவுடையக்காவின் நூல்களை எடுத்துக் கொண்டு, அந்நூலிலுள்ள கருத்துகள் சமூகத்தை எவ்விதம் நல்வழிப்படுத்தின என்பதையும், அவை முன் தோன்றிய திருக்குறள் கருத்துக்களுடன் எவ்விதம் ஒப்புமையாக இருக்கின்றன என்பதையும் ஆராய்வதன் மூலம் புதிய ஒப்பீடைக் காண முடியும்

திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீந்தார் பெருமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் போன்ற அதிகாரங்களில் வேதாந்தக் கருத்துக்கள் கூறப் பெற்றுள்ளன.

எனும் குறட்பாவில் உண்மைப் பொருள் எது என்று அறியப்படாமல் உலகில் காணும் அனைத்தையும் பொருள் இவை என்று எண்ணுவதே இழிவான பிறப்பாகும்.

மெய்ப்பொருளை காணும் அறிவே அறிவு. பெயருக்குக் கேடு விளைவிக்கும் ஐந்து புலன்களை வெல்வதே ஒரு வகையில் அறிவு என்பர்.

இதனையே வேதாந்தத்தில், செங்கோட்டை ஆவுடையக்கா தமது பல பாடங்களில் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்தும் தன்மை குறித்தும் கட்டுப்படுத்தாவிடின் ஏற்படும் தீமைகள் குறித்தும் பாடல்களால் எழுதி வைத்துள்ளார். அதில் ஒரு பாடலில்

என்கின்றார். ஒவ்வொரு புலன்களும் தெய்வத்தைத் தவறாக நாடுவதற்கு உதவும் பாங்கை இப்பாடல் விளக்கும். மெய்யான பொருளைத் தேடுவதே அறிவென்பர்.

16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆவுடையக்கா, தாம் எழுதிய 1000 பாடல்களுக்கு மேலான பாடல்களில், அத்வைதத் தத்துவத்தை விளக்கி எழுதியுள்ளார். அவை பல திருக்குறள்களில் உட்பொருளாக எழுதப்பட்டுள்ளன என்பதை அறிகிறோம்.

உமக்கென்ன உபகாரம் பாரும் உலகத்தில் கண்டு தேறும்‘ என்று நம் இருப்பிற்கான பொருள் அறியச் சொல்கிறார் அவர். அதற்கான சில சிந்தனை வித்துக்களை வரிவரியாய் நமக்குள் விதைப்பது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

இந்த வித்துக்களின் வழியே பூத்துக் குலுங்கும் கொத்துக் கொத்தான யோசனைகளில் சித்தர்களின் மொழி மற்றும் பொருள் வாசனையையும் நாம் நுகர முடிகிறது.

‘மரத்தில் மறைந்தது மாமத யானை…’ என்னும் திருமூலர் வரிகளை நாம் அறிவோம்.

ஆவுடையக்காள், ‘மரத்துக்குள்ளே யானை தாண்டி மறைத்தொளித்தாற் போலே தாண்டி பரத்துக்குள்ளே தாண்டித் துலங்கவே பார்த்து விட்டாண்டி’ என்று அதன் எளிய வடிவை எழுதியதோடு நில்லாமல்,

அதன் பொருளில் மற்றொரு பூச்சாக, ‘அதை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தாண்டி நான் அதற்கு அப்புறமாயிருந்தேண்டி’ என்று அத்வைத விளக்கத்தை விளக்குகிறார் குமரன் கிருஷ்ணன்.

‘வேதாந்தம் எனப்படும் மறை முடிவு நூலில் ஒன்றான ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள தைத்திரிய உபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயம் பிரம்ஹானந்தவல்லி, ஆறாம் பகுதியின் துவக்கத்தில் உள்ள இரு சொற்றொடர்களின் உட்பொருள் சொல்லப்பட்ட விதம், திருக்குறள் அதிகாரம் புல்லறிவாண்மை, எண் 850 , இறுதிக் குறளை ஒத்து உள்ளது விந்தையென்றே உணரலாம்’ என்கின்றார் வேல்முருகன்.

8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரரின் ஓரிறைக் கொள்கையும் மாயைத் தத்துவமும் பஞ்சகோசமும் சிறந்த தத்துவக் கோட்பாடுகளாகக் கூறத்தக்கனவாகும்.

இதனைத் திருக்குறள் முன் காலத்திலேயே தம் பாடல்களால் விளக்கி நிற்பதை இனம் காண்கின்றோம்.

தனித்தனி தத்துவங்களும், காலந்தோறும் மாறாமல், மனதால் ஏற்றுக் கொள்ளப் பெற்று, எவ்வாறு வழி வழியாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் உணர்கின்றோம்.

இவ்விதம் திருக்குறளுக்கும் வேதாந்தி ஆவுடையக்காவின் தத்துவக் கருத்துகளுக்குமான ஒப்புமைகளை, ஆழமாகச் சிந்தித்துத் தரவுகளுடன் எழுத எழுத, நம்மின் அகவயக் கோட்பாடுகள் எவ்வளவு ஆழமானவை என்பதை உலகுக்குக் காட்டுவதாக அவை அமையும்.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

பாரதிசந்திரன் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.