மணமுடித்து வாழ்ந்து
இழைக்கும் துரோகம்
வெட்கமறியா வேட்கைகளில்
விபரீதப் பரிமாணங்களாய்
விளைகிறது உயரமாய் கோரமாய்!
ஆணி வேரெனும்
உறவுகளை
அழித்து வளர்கிறது
ஆரவார இச்சை!
பாதகம்
இழைத்த பாதிப்புகள்
பரந்து விரிகின்றன
பெருங்கிளைகளாய்!
அக்னி சாட்சியை
அலங்கோலப்படுத்திய
பெருந்துரோகம்
கொல்கிறது மனசாட்சியை!
உணர்வு மயக்கத்தில்
நினைவுகள்
கொன்று விடுகின்றன
நினைவுகளை!
துரோகம் முற்றித் தோற்றபின்
தனிமரங்களைத்
தத்தெடுத்துக் கொள்கிறது
வெறுமை!
தரமிழந்த இனிமைகளின்
இறுதியில்
உள்ளும் புறமும் சூழ்கிறது
ஆலகால விஷம்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!