சுழலும் சக்கரங்களில்
இருக்கிறது வண்டியின்
ஓட்டம்…
மரம் விடும் மூச்சில்
இருக்கிறது மனிதனின்
உயிர் ஓட்டம்…
காலத்தின் கரங்களில்
அமர்ந்திருக்கிறது
வாழ்க்கையின் ஓட்டம்…
பூமியின் சுழற்சியில்
மூச்சு விடுகிறது
இயற்கையின் ஓட்டம்…
எல்லாவற்றையும் தேடி
ஓடிக் கொண்டே இருக்கிறது
மனிதனின் மூளையும்
மனமும்…
தேடுதல் என்பது
மனித வாழ்வின் நிதர்சனம்
தேடாதிருந்தால் வாழ்வு
உனக்குத் தரும் உதாசீனம்…
தேடுதலின் ஓட்டங்கள்
உனக்குத் தருவது வெற்றி!
தேடாத ஓட்டங்கள்
தடைக்கோட்டை எழுப்பும்
உன்னைச் சற்றி…
காலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது
அவரவர் ஓட்டத்தையும்
அவரவர் வெற்றி தோல்வியையும்
ஒரு நீதிபதியாக…
ரோகிணி கனகராஜ்