தேவர்களும் அறியாத ஆனந்தம்!

கடல் எல்லையற்றது என்றால் என்

காதல் அதனினும் அகன்றது ஆழமானது!

சாலைகள் அண்டம் தாண்டி விரிந்தால்

அங்கேயும் இருப்பது என் காதல்!

அல்லும் பகலும் ஆதவன் ஒளியும் விண்மீனும்

அழகிய இயற்கையின் வடிவம்!

சொல்லுக்கும் சிந்தைக்கும் நீருக்கும் நெருப்புக்கும்

விண்ணுக்கும் மண்ணுக்கும் அடங்காதது என்காதல்!

அன்பே உன் மனம் மாறாமல் நீ சிரிக்கலாம்

ஆனாலும் என்னுயிரே ஒரு முத்தம் தா!

வானத்து தேவர்களும் அறியாத

ஆனந்தம் அதுவல்லவா!

ஆசிரியர்: ஷேக்ஸ்பியர்

மொழிபெயர்ப்பாளர்: பேராசிரியர் ஆ.செம்மலர்

கவிதையின் ஆங்கில மூலம்

If seas were infinite, my love would be
Yet greater still and more profound;
If roads led to eternity
Even there it would be found.

Stars, sunshine, the night, the day
Are images of something better,
But words, thoughts, fire, water and clay
Can never my true love fetter.

Laugh then, and be yourself, but give
me, my dear sweet, one kiss –
The gods that on Olympus live
Have never known such bliss.

Shakespeare

One Reply to “தேவர்களும் அறியாத ஆனந்தம்!”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.