எங்கேயோ பார்த்த ஞாபகம்
எப்போதோ கேட்ட குரல்
இன்று நினைக்கும் போது
சிந்தனையின் மோகம் என்றாவது ஒரு நாள்
ஏதாவது ஒரு நிமிடம்
எப்படியாவது உன்னைப் பார்க்க
மனம் இறங்கி விடாதா என்று
என் அறிவு எப்போதும் நச்சரித்து கொண்டு இருக்கிறது
ஆனால் மனம் ஒருபோதும்
அதற்கு இடம் அளிக்காமல் இருக்கிறது
இதற்கு நான் என்ன செய்வது
வருத்தப்படுவதா, ஆச்சரியப்படுவதா, சந்தேகப்படுவதா
இல்லை மகிழ்ச்சி தான் கொள்வதா
நடுக்காட்டில் இந்த மரம் போல் நின்று கொண்டிருக்கிறேன்
மேகம் மழை தூவுவது போல
என்றாவது ஒரு நாள் உன் பார்வை
காற்று போல என் மீது வந்து வருடாதா என்று காத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் வறண்ட பாலைவனத்தில் முளைத்த கள்ளிச் செடி போல்
தனிமையில் நேரம் கழிந்து கொண்டிருக்கிறது
என்றாவது ஒருநாள் என் தனிமை இனிமையாகத் தான் போகிறது
உன் வருகையால்!
நான் காத்திருக்கிறேன்…
அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188