நிலங்களின் வகைகள்

நிலங்கள் அவற்றின் அமைவிடத்தைப் பொறுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

ஆனால் நிலங்கள் அவற்றின் பயன்பாடு, தன்மை ஆகியவற்றின் அடிப்படையில்
நமது முன்னோர்கள் நிலங்களை பல்வேறு வகைகளாக பிரித்துள்ளனர். அவற்றிப் பற்றிப் பார்ப்போம்.

நிலம் (பொதுவாக சொல்வது)

கல்லாங்குத்து நிலம் – கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்

செம்பாட்டு நிலம் – செம்மண் நிலம்

மேய்ச்சல் நிலம் – கால்நடைகள் மேய்யும் நிலம்

வட்டகை நிலம் – சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம்

அசும்பு – வழுக்கு நிலம்

அடிசிற்புறம் – உணவிற்காக விடப்பட்ட மானிய நிலம்

அடுத்தூண் – பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்

அறப்புறம் – தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம்

ஆற்றுப்படுகை – நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம்

இதை – புன்செய் சாகுபடிக்கான நிலம்

இறையிலி – வரி நீக்கப்பட்ட நிலம்

உவர்நீலம் – உப்புத்தன்மை கொண்ட நிலம்

உழவுகாடு – உழவுக்கேற்ற நிலம்

உள்ளடிநிலம் – ஏரியை அடுத்துள்ள நிலம்

ஊர்மானியம் – ஊரின் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட வரியில்லா நிலம்

ஊரிருக்கை – ஊரைச் சார்ந்த நிலம்

ஒருபோகு – ஒரே தன்மையை உடைய நிலம்

ஓராண்காணி – ஒருவனுக்கே உரிய நிலம்

கடவுளரிடன் – கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்

கடறு – பாலை நிலம்

கடுந்தரை – இறுகிய நிலம்

கரம்பு – சாகுபடி செய்யாத நிலம்

கரம்பை – வறண்ட களிமண் நிலம்

கழனி / காணி – நன்செய் நிலம்

களர் – சேற்று நிலம்

காணியாட்சி – உரிமை நிலம்

காவிதிப்புரவு – அரசனால் கவிதைப் பட்டம் பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்

கீழ்மடை – மடைநீர் இறுதியாகச் சென்று பாயும் நிலம்

கொத்துக்காடு – கொத்திப் பயிரிடுவதற்குரிய நிலம்

கொல்லை – முல்லை நிலம்

சாந்துப்புறம் – அரசனுக்குச் சந்தனம் கொடுத்து வருவதற்காக விடப்பட்ட இறையிலி நிலம்

சுரம் – வறண்ட பாலை நிலம்

சுவாஸ்தியம் – பரம்பரையாக வரும் நிலம்

செய்கால் – சாகுபடி நிலம்

செய்கால்கரம்பு – தரிசாக விடப்பட்ட நிலம்

செவல்காடு – செம்மண் நிலம்

தகர் – மேட்டு நிலம்

தண்பணை – மருத நிலம்

தரிசு – சாகுபடி செய்யப்படாமல் கிடக்கும் நிலம்

திருத்து – நன்செய் நிலம்

தினைப்புனம் – தினை வகைகள் விளையும் நிலம்

தோட்டக்கால் – கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் நிலம்

நத்தம் – கிராமத்தில் உள்ள மனை நிலம்

நதீமாதுருகம் – ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்

நீர்நிலம் – நன்செய் நிலம்

நீராரம்பம் – நீர்பாசன வசதியுள்ள நிலம்

பங்குக்காணி – கூட்டுப்பாங்கான நிலம்

படிப்புறம் – கோயில் அருச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்

பயிரிலி – தரிசு நிலம்

பழந்தரை – நீண்ட நாள் சாகுபடியில் இருந்ததால் வளம் குன்றிய நிலம்

பள்ளக்காடு – தாழ்வான புன்செய் நிலம்

பற்றுக்கட்டு – குடியுரிமை நிலம்

பாதவக்காணி – கோயில் பணியாளர்களுக்குப் படியாகத் தரப்படும் நிலம்

பார் – கடினமான நிலம்

பாழ்நிலம் – விளைச்சலுக்கு உதவாத நிலம்

பிரமதாயம் – பிராமணருக்குத் தரப்படும் மானிய நிலம்

புரவு – அரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்

புழுதிக்காடு – புழுதியாக உழுத புன்செய் நிலம்

புழுதிபாடு – தரிசு நிலம்

புறணி – முல்லை நிலம்

புறம் – இறையிலி நிலம்

புறம்போக்கு – சாகுபடிக்கு ஏற்றதல்லாத அல்லது பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்ட தீர்வை விதிக்கப்படாத நிலம்

புறவு – முல்லை நிலம்

புன்செய் – மழை நீரைக் கொண்டு புன்செய் பயிர் சாகுபடி செய்யும் நிலம்

புன்புலம் – தரிசு நிலம்

புன்னிலம் – வறண்ட, பயனற்ற நிலம்

பூசாவிருத்தி – கோயிற் பூசைக்கு விடப்பட்ட மானிய நிலம்

பூமி – தரை (நிலம்)

பொதுநிலம் – பிரிவினை செய்யப்படாத நிலம்

போடுகால் – தரிசு நிலம்

மஞ்சள்காணி – பெண்ணுக்குப் பெற்றோர் சீதனமாகத் தரும் நிலம்

மடப்புறம் – மடத்திற்கு விடப்பட்ட மானிய நிலம்

மனை – வீடு கட்டுவதற்கான நிலம்

மா – நிலம்

மானாவாரி – மழைநீரால் சாகுபடி செய்யப்படும் நிலம்

மானியம் – கோயில், நிருவாகம், அறச்செயல்கள் போன்றவற்றிற்கு முற்காலத்தில் வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்

முதைப்புனம் – நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்

மெல்லம்புலம்பு – நெய்தல் நிலம்

மென்பால் – மருத நிலம் / நெய்தல் நிலம்

மேட்டாங்காடு – புன்செய்ப் பயிர்கள் விளையும் மேட்டுப் பாங்கான நிலம்

வறுநிலம் – பாழ் நிலம்

வறும்புனம் – அறுவடைக்குப் பிறகு தரிசாக உள்ள புன்செய் நிலம்

வன்பார் – இறுகிய பாறை நிலம்

வன்பால் – பாலை நிலம்

வானம்பார்த்த பூமி – மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்

விடுநிலம் – தரிசு நிலம்

வித்துப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்

விதைப்பாடு – குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்

விருத்தி – ஒருவருடைய பிழைப்புக்கு மானியமாக விடப்பட்ட நிலம்

விளைநிலம் – பயிர் செய்யும் வளமுடைய நிலம்

வெங்கார் மண் – சூரிய வெப்பத்தால் சூடேறிய நிலம்

வெட்டுக்காடு – திருத்தியமைத்த காட்டு நிலம்

மதிப்பீடு செய்க


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.