வீசும் காற்று
மெல்லிய தென்றல்
விட்டுப் போன
மலரின் சுகந்தம்
மழையின் கம்பிகள்
மண்ணோடு கலந்த
மகரந்த சுகந்தம்
மகிழும் பூக்கள்
இயற்கையின் இயற்பியலில்
இறைந்து நின்றே
நீயா நானா
நீரலைகளாய் போட்டியுண்டோ?
காதலாய் உயிர்கள்
காணுமே இன்பம்
கருத்து வேறுபாடுகள்
களம் காணுதே
போட்டிகள் பொறாமைகள்
பொங்கி வழிவதில்
போருக்கான ஆரம்பங்கள்
மோதலில் வருத்தங்கள்
அன்பெனும் ஆயுதங்கள்
அவசரங்களைக் களையுமே
அரிதாக்குவோம் சொற்போர்களை
அழித்திடுவோம் மனவலிகளையே!
கவிஞர் இரஜகை நிலவன்
மும்பை