பள்ளி போகும் வேளையில்
பாவம் அறியா நிலையினில்
பரிதவிக்கும் பிஞ்சுகள்
பேடிமூடர்கள் கையினில்
பசியின் கொடுமை அஞ்சியே
பெற்றவர்கள் இருந்துமே
ஏதும் அறியா நிலையில்
பேதையாக அலையுமே
வெவ்வேறு சூழலில்
மாட்டிக் கொண்ட பிஞ்சுகள்
காசுக்குக் கையேந்துமே
மாற்றிட சமூகம் தூண்டுமே
எழுந்து வா
பாரதி எடுத்துரைத்த மாதிரி
எட்டு திசைக்கும் முழக்கமிட்டு
பள்ளிக்கூடம் சென்றிடு
மடமையான சமூகத்தை
மாற்ற வழி செய்திடு!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!