பிறந்தேன் – பிறந்த பயன் (ஞானம்) கற்றேனா?
கற்றேன் – கற்றபடி (தர்மம்) நடந்தேனா?
நடந்தேன் – நடந்த வழி (நேர்மை) நின்றேனா?
நின்றேன் – நின்ற இடம் (நியாயம்) உணர்ந்தேனா?
உணர்ந்தேன் – உணர்ந்தவுடன் (உண்மை) நிலைத்தேனா?
நிலைத்தேன் – நிலைத்து சில (ஈகை) செய்தேனா?
செய்தேன் – செய்த பணி (புகழ்) களித்தேனா?
களித்தேன் – களித்தபடி (அமைதி) வாழ்ந்தேனா?
வாழ்ந்தேன் – வாழ்வதற்கே (கர்மம்) பிறந்தேனா?
முனைவர் த.தமிழ்செல்வம்
வேதபுரி
நெஞ்சம் தொட்ட வரிகள்
பலரின் நெஞ்சில் தைக்கும் வரிகள்