தொன்மையிலும் மென்மையானவளே
முதல் அடி எடுத்து அமுதத்தைக்
குழைத்து சுவையுணர்வைத் தந்தவளே
உயிரினில் கலந்து உதிரத்தில் தவழ்ந்து
ஒய்யாரமாய் நிலைப்பவளே இளையவளே
இசைக் குயிலே இதயத்தின் இலக்கியமே
தொடுநிலவே தேன் துளியே
தித்திக்கும் பொருள் கனியே
எடுத்து ருசிப்பவருக்கு ஏக்கத்தைத் தந்தாயே
விட்டுப் போகிடா மதியில் நுழைந்தாயே
லகரமாக வந்து லாவகமாக அணைத்துத்
துள்ளித் திரிந்து துயில் ஆடச் செய்து
அறியாதவருக்கும் அழைப்பிதழ் தந்து
அழகிய மொழியாய்க் கவிதை ஆனாயே
உன்னோடு இணைந்த உறவுகளுக்கு
மெய்யான உந்தன் உணர்வினைத் தந்தாய்
காற்றாய்க் கலந்து மூச்சாய் வந்து தமிழோடு
இணையும் பந்தத்தைத் தந்தாய்
உந்தன் மடியில் தவழ்வதைக் கண்டு
பெருமிதம் கொள்வேன்
பேரின்பத்தோடு நான் தமிழன் என்று!

அருமை