தைமகளை, தமிழ் மகளைத்
தமிழ் மக்கள் போற்றிடும் நாள்
உறவுகளை நட்புதனை
அன்புதனைப் பெருக்கிடும் நாள்!
அச்சாணி உழவனை
அவன் துணையாம் கால் நடை
உயிரூட்டும் பகலவனை
நன்றியுடன் வணங்கிடும் நாள்!
நமக்கிது புத்தாண்டு புதுப்பொங்கல்
என்றுமே புதுப் பொங்கல்!
புது நெல் புத்தரிசி
புது அடுப்பு புதுப்பானை
புதுக்கரும்பு புத்தாடை
மாட்டிற்கும் ஆட்டிற்கும்
புதுப்பொட்டு புதுமாலை
எத்துணைப் பொங்கலிலும்
புதுப்பொலிவு புதுவரவு புத்துணர்வு
அத்துணையும் உம் வசமே
நிலைத்திடவே எம் வாழ்த்து!
மாற்றங்கள் காணுகின்றோம்
மாறியும் வருகின்றோம் பல வழியில்
மனத்தளவில் மானுடம் தழைக்க வேண்டும்
அன்பெனும் மென்காற்றால்
மனமெலாம் இன்பமே பொங்கிடவும்
தங்கிடவும் எம் வாழ்த்து…
சிராங்குடி, த. மாரிமுத்து – சொர்ணாம்பாள் மாரிமுத்து
மன்னார்குடி