மகதியும் மாம்பழமும் – சிறுகதை

மகதி அவங்க தாத்தா கிட்ட “இந்த வீட்ட விற்க வேண்டாம் தாத்தா. இங்க நான் ஆசையா நட்டு வைத்து வளர்த்த மல்கோவா மாம்பழம் இப்பதான் காய்க்க போகுது. நீங்க இத வித்துடீங்கன்னா அதை நான் எப்படி தாத்தா சாப்பிடுவேன்?” என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என அழத் தொடங்கினாள் மகதி.

தாத்தாவுக்கும் சற்று மனம் வலிக்கத்தான் செய்தது.

ஆனாலும் என்ன செய்வது?

சூழ்நிலை காரணமாக அவர்கள் குடியிருந்த அந்த வீட்டை விட்டுவிட்டு அதைவிட சிறியதாக உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர்.

ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் மகதி பள்ளிக்கு செல்ல தொடங்குகிறாள்.

மகதியின் வீட்டை விலைக்கு வாங்கிய வீட்டில் சுமதி என்ற பெண் மகதியோடு அதே பள்ளியில் ஒன்றாக படிக்கிறாள்.

ஓரிரு வாரங்கள் கழித்து சுமதி மாம்பழம் கொண்டு வந்து மகதியிடம் கொடுக்கிறாள்.

மாம்பழம் கொடுக்கும்போது , “மகதி! மகதி! இது எங்க வீட்டு மாம்பழம். எப்படி இருக்கு?” என்று கேட்கிறாள்.

மகதி சற்று கோபமாக, ‘”இது ஒன்னும் உங்க வீட்டு மாம்பழம் இல்ல. நான் வளர்த்த மாம்பழம். என் மாம்பழம். ஆனால் இது இப்ப எனக்கு வேண்டாம்'” என்று கூறிவிட்டு வீட்டிற்கு ஓடுகிறாள்.

தாத்தாவிடம் சென்று ‘ “தாத்தா… தாத்தா… அந்த மல்கோவா மாம்பழம் என்னோடது தானே…

ஆனா அதை போட்டு வளர்த்த எனக்கு சொந்தம் இல்லாம சுமதி அவளோட மாம்பழம்னு சொல்றா…

இது எந்த விதத்தில் நியாயம் தாத்தா?” என்று முறையிடுகிறாள்.

தாத்தா சற்று புன்னகையுடன் மகதியை அருகில் அழைத்து,

“மகளே விதைத்தது நாமாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தை நாம் விற்ற பிறகு அந்த மாமரத்தை வாங்கியவருக்குத்தான் அந்த மாம்பழம் சொந்தமே தவிர மீண்டும் நம்முடையது ஆகாது.

பெண் என்பவள் பிறந்த அகத்திற்கு குலம் தழைக்க பயன்பட மாட்டாள். அதுபோல நன்கு வளர்ந்த பிறகு குழந்தையில் பயன்படுத்திய பலகையும் பலப்பமும் துணை என்று ஆகாது.

இதை உணராத சிலர் என்னால் தான் எல்லாம் என்று வாதித்து வீண் வம்பில் மாட்டிக் கொள்கின்றனர்.

விதைத்தவருக்குத்தான் பலன் வேண்டுமென்றால் உலகில் இயற்கையே நிலைக்காது! இயற்கைக்கு முரணாக நாம் சிந்திப்பதும் ஆகாது !” என்று கூறினார்.

பின்னர் புதிதாக வந்த வீட்டில் மீண்டும் ஒரு மாங்கன்றை தாத்தா நடத் துவங்குகிறார்.

மகதியும் ஒருவாறு உணர்ந்தவளாய் அந்த மாஞ்செடிக்கு நீர் ஊற்றுகிறாள்.

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.