விண்ணில் வந்த
விண்மீன் சுடரே
தொல்காப்பியம் தந்த
தொலைதூர இலக்கணமே…
வசந்த வாழ்வின்
வல்லின வானவில்லே
வறண்ட பாலைவன
வண்ணப் பசுஞ்சோலையே…
மண்ணிற்கு வந்த
பண்ணின் பாவலையே
வண்ணங்களின் வாசமே
வரலாற்று மகிழ்வே…
மலர்ந்து விரிவான
மடியில் பூத்த மலரே
மகரந்த சேர்க்கையின்
மணிமுத்தாறு அமுதே…
கனவிலும் நினைவிலும்
களறியாகும் கற்பகமே!
கசக்குமோ உந்தன்
மழலையே…
கவிமணி இரஜகை நிலவன்
மும்பை
மறுமொழி இடவும்