மனதின் உளறல்!

என்ன இருந்தாலும்
அன்றைக்கு அப்படி நடந்திருக்கக் கூடாது
ஆனால் என்னவோ தெரியவில்லை நடந்து விட்டது
நானும் அன்று அப்படி பேசி இருக்கக் கூடாது
யோசித்து இருக்க வேண்டும்
என்னவோ தெரியவில்லை அப்படி நடந்து கொண்டேன்

நம் விருப்பு வெறுப்பை தாண்டி
நாம் பேசியிருக்க வேண்டும்
சிறிது உரையாடலை தொடர்ந்திருக்க வேண்டும்
உனக்கான இடைவெளியை நான் அளித்திருக்க வேண்டும்
நீயும் எனக்கான இடைவெளி அளித்து இருக்க வேண்டும்
ஆனால் அப்படி நடக்கவில்லை
நாமும் அப்படி அப்படி செய்யவில்லை
அதற்கு இப்போது வருந்திக் கொண்டிருக்கிறேன்
உண்மையாக சொல்ல போனால் வருத்தம் என்பதை விட
அன்று வேண்டாம் என்று ஒரு முறை மட்டுமே நினைத்தோம்
தற்போது வேண்டும் என்று மீண்டும் மீண்டும்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீ எப்படி என்று தெரியவில்லை
என்ன செய்வது எப்படி வேண்டினாலும்
மீண்டும் கிடைக்க மாட்டாய்
இருந்தும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

நான் சின்னஞ்சிறு செயல்களுக்கு துணையாக
யாரோ ஒருவரை மெய் உணர்வுக்காக
வேண்டுமென்றால் அழைக்கலாம்
ஆனால் உள்ளுணர்வு எப்போதும்
உன்னை மட்டுமே அழைத்துக் கொண்டிருக்கிறது
என் சிறு கஷ்டங்களும் துன்பங்களும் துயரங்களும்
எனக்கு உன்னை மட்டுமே நினைவு கூறுகின்றன
நீ என்னுடன் இருந்த நாட்களில்
வந்த துன்பங்களும் துயரங்களும்
என்னை ஒருபோதும் காயப்படுத்தியதில்லை
தற்போது சிறு மன கஷ்டம் வந்தாலும் கூட
என் மனம் உன்னை மட்டுமே தேடுகின்றது!

இன்னும் எத்தனை நாட்களுக்கு
இப்படி என்று தெரியவில்லை
நூலுடன் சேர்ந்து இருக்கும் பூக்களை போன்று
நீ என்னுடன் இருந்த நாட்களில்
என்னுடன் பேசிய வார்த்தைகளும் சொற்களும்
என் மனதுடன் பிணைந்து இருக்கின்றன
பூக்கள் வாடி நூலில் இருந்து பிரிவது போல
என்றைக்கு உன் நினைவுகள் என் மனதில் இருந்து
பிரிந்து செல்லும் என்று தெரியவில்லை
அப்படி நடக்குமா என்று தெரியவில்லை
அப்படி நடக்க ஒரு போதும் எந்த வாய்ப்பும் இல்லை
இத்தனை நாட்களாகியும் நான்
இன்னும் உன் நினைவுகளுடன் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

சதிஷ்

அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.