நாம் நன்றாக இருக்கின்றோம் என்று சொல்லலாம்
ஏன் நம் எதிரே வருபவரை
புன்னகை செய்ய வைக்கலாம்
நாமும் சேர்ந்து கூட புன்னகை செய்யலாம்
ஆனால் நம் மனது எதையோ தேடிக் கொண்டிருக்கிறது
யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது
யாரோ ஒருவருடைய கரங்களின்
ஆதரவை தேடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை
எத்தனையோ நண்பர்களின் மத்தியில்
நாம் ஆனந்தமாய் இருக்கிறோம் என்று வெளிப்படுத்தினாலும்
நம் மனதில் உள்ளே ஏதோ ஒரு ஏக்கம்
ஏதோ ஒரு துக்கம் நம்மை வாட்டி வதைக்கின்றது
யாரோ ஒருவரின் வருகைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
அப்படி அவர் வருவார் என்றால்
நம் மனம் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும்
இல்லையென்றால் அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்
அது ஏன் என்று தெரியவில்லை
நம் மனது யாரோ ஒருவரின்
துணைக்காக அல்லது அரவணைப்புக்காக
ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது!
சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188
மறுமொழி இடவும்