தன்னையொத்த மனித இனமொன்று
தன்னாலேயே முற்றிலும் அழிந்தபின் தான்
சண்டையிட வேறோர் இனம் இல்லாமையல்
பிரித்தாள அடிமைப்படுத்த என மனிதன்
தன்னகத்தே பிரிவினையை உண்டு பண்ணுகிறான்
அதனை ஊக்கப்படுத்தியும் வருகிறான் அது
அவனுக்கு தேவையாகவும் இருக்கிறது!
ஆதி மனிதனாய் எந்த பேதமுமின்றி
நாடோடியாய் சுற்றித் திரிந்தவன்
பரிணாம மாற்றத்தை அடைய
பிரிவினைகளும் பல
பரிணாமங்களை எட்டுகின்றன
நிறம் மொழி இனம் மதம் சாதி என
பிரிவினைகள் ஏராளம்…
கால நிலைக்கேற்ப குளிர் மற்றும் வெப்ப சூழலில்
உண்டான நிறமிகளின் மாற்றத்தால்
கருப்பு மற்றும் வெள்ளையென மனிதருள்
இருவேறு நிறங்கள் தோன்ற
ஆதி இனத்தின் நிறமான கருப்பினம் கீழாகவும்
வெள்ளை இனம் மேலாகவும் பார்க்கும்
பாரபட்சம் பல வீழ்ச்சிக்கும் காரணமாக
இன்று வரையிலும் தொடர்கிறது…
(தொடரும் )
தா.நவீன்ராஜ், M.A., M.Ed.
ஆங்கில ஆசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
திருவாளப்புத்தூர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!