மனிதன் போற்றும் பிரிவினை – 3

ஒத்த உணர்வுடைய சக மனிதனுள்
நிறம் என்ற ஒற்றை வேறுபாட்டை
காரணமென கருதி யங்கே
அடக்குமுறைகளும் அடிமைத்தனமும்
குற்ற உணர்வேயன்றி வேரூன்றி நிற்கிறது

வெள்ளை நிறத்தவர்களோ தங்களுக்கு
சேவகம் செய்திட படைக்கப்பட்ட இனமே
கருப்பினம் என தீவிரமாய் நம்பிஅவ்வாறே
அடிமைத்தனமாய் நடத்தியும் வந்தனர்

கருப்பினத்தவரோ வெறுப்புணர்வுக் கிடையே
இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென
தமக்குள்ளேயே அடிமைத் தனத்தை விதைத்து
அதற்கு வாழவும் பழகிட பல்லாயிர மாண்டுகளானது
அவன் அடிமைத்தனம் உடைய… உரிமையை அடைய…

அவர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி
குருதியினை சூடாக்கி, உரிமை வேட்கையை எட்டவும்
சமநிலையை அடையவும் பல போராளிகளின்
புரட்சிகரமான போராட்டங்களும் தியாகங்களுமே
காரணமாக அமைந்தது நல் வரலாறு

(தொடரும்)

தா.நவீன்ராஜ்
திருவாளப்புத்தூர்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.