பதில் தெரியா கேள்விக்கெல்லாம்
கடவுள் என்ற ஒன்றையே பதிலாக நிரப்புகின்றனர்!
கடவுள் இல்லாத இடத்திலே இருக்கிறார்
ஏனெனில் கடவுள் இல்லை!
எழுத்துருவே இல்லாத ஒரு மொழியில்
யாருக்கும் புரியாமல் யாருக்கும் ஆகாத
ஒரு விதியினை உருவாக்கி அவற்றில்
தலை, தோல், தொடை, பாதத்தில் பிறந்தவர்கள் என்ற
ஆகச்சிறந்த அறிவியலை முன்னிறுத்தி
சத்ரிய, வைசிய, சூத்திரன் என்று
பிறப்பில் பிரிவினைகளை உருவாக்குகின்றனர்!
அதில் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டு
மதத்தின் பெயரால் மூட நம்பிக்கையை விதைத்து
அதிகார மையத்தை அடைகின்றனர்!
அதனை உறுதிப்படுத்த
வேதங்கள், புராணங்கள் என பலவாறு புனையப்படுகின்றன…
சாதியப் படிநிலைகள் ஆழமாக வேரூன்றி
இம்மண்ணில் பரவி விட முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள்
இல்லை என்று இன்றளவும் வியக்கும் வண்ணம்
நான்கு வண்ண கோட்பாடும் விதைக்கப்படுகிறது…
( தொடரும் )
தா. நவீன்ராஜ், M.A., M.Ed.,
திருவாளப்புத்தூர்