சூரியனை சுற்றியொரு கோளாய்
செவ்வனே வலம் வந்த பூகோளத்தில்
நிகழ்கிறதொரு பேரதிசயம்!
கடும்பாறை நிறைந்த வெட்ட வெளிதனில்
கடற்கரை மணலோரம்
பெரும் நெருப்பு குழம்பொன்று
வெடித்து சிதற உண்டான அமில
மாற்றத்தால் நீராதாரமே மையமென
நுண்ணுயிர்கள் உருவாகி
மண்ணை ஆள
மெல்ல மெல்ல பரிணாமத்தை எட்ட
ஊர்வன பறப்பன உருப்பெறுகின்றன!
பரிணாம படிநிலையில்
பலகட்டங்களை எட்டிய பின்பே
மனித இனமொன்று தோன்ற
நியோதால்மிய, ஹோமோசேப்பியன்ஸ்
என வாழ்ந்த
இரண்டொரு இனமின்று
ஓர் இனமாய் ஆன பின்னர்
பிரிவினையும் பலவாறு மலர்ந்தது
(தொடரும் )
தா.நவீன்ராஜ், M.A., M.Ed.
ஆங்கில ஆசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
திருவாளப்புத்தூர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!