மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் 30 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 5 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 08.04.2019 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.
கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
2019-ஆம் வெளியிடப்பட்ட மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், புதுடெல்லி 87.52 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை
வரிசை எண் | பெயர் | மதிப்பெண் | இடம் |
1 | கிருத்துவ மருத்துவ கல்லூரி, வேலூர் | 70.32 | 3 |
2 | ஸ்ரீ ராமச்சந்திர கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை | 58.45 | 11 |
3 | எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 49.14 | 22 |
4 | சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானக் கழகம், சென்னை | 47.41 | 25 |
5 | அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் | 46.63 | 26 |
இந்திய அளவில் தமிழக மருத்துவ கல்லூரிகள் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.
Comments
“மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019” மீது ஒரு மறுமொழி