ரோமானியக் கடவுள் ‘ஜானஸ்‘ பெயரில் ஏற்பட்டதுதான் ஜனவரி. ஜானஸூக்கு முன்னும் பின்னும் இரண்டு முகங்கள். பின்முகம் பழைய வருடத்தையும் முன்முகம் புதுவருடத்தையும் குறிக்கும்.
பாவம் செய்தவர்கள் தாங்கள் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டதும், அவர்கள் மன்னிக்கப்பட்டு அதற்காகக் கொண்டாடப்பட்ட ரோமானியர்களின் ‘ஃபெப்ரூவா‘ என்னும் பண்டிகையைக் கொண்டு அழைக்கப்பட்ட மாதம் பிப்ரவரி.
பத்து மாதங்களே கொண்ட ரோமானியக் காலண்டரில் முதல் மாதம் மார்ச். யுத்தக் கடவுளான ‘மார்ஸ்‘ பெயரில் அழைக்கப்பட்டது.
‘ஏப்ரோடைட்‘ என்னும் கிரேக்கர்களின் கடவுள் பெயரைக் கொண்டது ஏப்ரல் மாதம்.
ஜூபிடரின் மனைவியான ‘மையா‘ பெயரில் அழைக்கப்பட்ட மாதம் மே.
ரோமானியர்களின் புராணத்தில் இடம் பெற்றிருக்கும் சொர்க்கத்தின் அரசியான ‘ஜூன்‘ பெயரில் அழைக்கப்பட்டது ஜூன் மாதம்.
ஜூலை மாதம் புகழ் பெற்ற ரோமானியச் சக்கரவர்த்தி ‘ஜூலியஸ் சீசர்‘ பெயரால் அழைக்கப்பட்டது.
மற்றொரு ரோமானியச் சக்கரவர்த்தியான ‘அகஸ்டஸ்‘ பெயரால் ஆகஸ்ட் மாதம் தோன்றியது. ஆகஸ்ட் மாதம் முப்பது நாட்களைக் கொண்டதாக இருந்ததாம்! அகஸ்டஸ் சக்கரவர்த்தி தன் பெயரால் அழைக்கப்படும் மாதமும் ஜூலியஸ் சீசரின் மாதத்தைப் போல் முப்பத்தொரு நாட்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பியதால் ஆகஸ்ட் மாதமும் முப்பத்தொரு நாட்களைப் பெற்றது.
எண் ஏழு லத்தீன் சொல்லான ‘செவன்‘ ஆகும். ரோமானியக் காலண்டரில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இடம் பெற்றது.
லத்தீன் சொல் ‘அக்டோ‘-விலிருந்து பிறந்தது அக்டோபர் மாதம். ‘அக்டோ’ என்றால் எண் எட்டு. ரோமானியக் காலண்டரில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது.
எண் ஒன்பதுக்கான லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது நவம்பர் மாதம். ரோமானியர்களின் காலண்டரில் இம்மாதம் ஒன்பதாவது மாதமாக இடம் பெற்றது.
ரோமானியர்களின் பத்தாவது மாதமான டிசம்பர் எண் பத்துக்கான லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998