முதல் காதல் முற்றிலும் போதை
போதை முற்றினால் மீளவும் முடியுமோ
முடியுமோ காதல் பிடியில் தப்பிக்க
தப்பிக்க நினைத்தாலும் மனம் தடுமாறி விழுந்தால்
விழுந்தால் எழுவது வாழ்க்கை காதலில் இல்லை
இல்லையே காதலின்றி வாழ்க்கை வேடம்
வேடம் பூண்டு தப்பிக்க இயலுமோ
இயலுமோ காதல் வந்தபின் தப்பிக்க
தப்பிக்க நினைத்தாலும் விடுவதில்லை முதல் காதல்!
(அந்தாதித் தொடையில் அமைந்த அருமையான கவிதை.
ஒரு வரியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்து அடுத்துவரும் வரியின் முதலில் வரும் வகையில் அமைவது அந்தாதித் தொடை எனப்படும்.
இப்போது கவிதையை மீண்டும் படித்துப் பாருங்கள்; நன்றாக இருக்கும்.)