முரண் – கவிதை

ஏரி சுருங்கிய
அடுக்குமாடி வீட்டின்
அழகிய
வரவேற்பறைத் தொட்டியில்
வண்ண மீன்கள்!

மொட்டை மாடி வாடும்
சிறைப்பூக்கள்!

வனங்களை அழித்துப் போட்ட
வளைந்த சாலைகளில்
யானைகளோடு
வாகன உரசல்!

சுழன்று பின்னும்
சூறாவளியைத் தடையிடும்
வானளாவல்களில்
நகரமயமாக்கல்!

செழித்த வளங்களை
மேய்ந்து போகும்
கொழுத்த மந்தையில்
விளக்கில்லை தொடரும்!

துரிதங்களை மட்டுமே
அணிந்து கொண்ட
அவசரகதிகளின்
அவசியம்
புரியாத புதிராகிறது!

கரிசல்காடு துறந்த
நெரிசல் காட்டில்
இரைச்சல்களின் மத்தியில்
இறந்து போகிறது
இனிமை தேசம்!

எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com