ரயில் பற்றிய ரகசியங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? அந்த அறிவுப்பூர்வமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
சில ரயில் என்ஜினின் முகப்பில் WDP4, WAP5 என்ற ரகசிய குறியீடுகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இந்த குறியீடுகள் ரயிலின் தன்மையை நமக்கு மறைமுகமாக அறிவிக்கின்றன.
முதல் எழுத்து
குறியீட்டின் முதல் எழுத்தானது W- WIDE கேஜ் அல்லது பிராட் கேஜ் என்பதனை குறிக்கிகிறது. பிராட் கேஜ் ரயில் பாதையானது 5 அடி 6 அங்குலத்துடன் இருக்கும்.
ஒருவேளை மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தால் முதல் எழுத்து “Y” என்பதாக இருக்கும். மீட்டர் கேஜ் ரயில் பாதையின் அகலம் 3 அடி 3 அங்குலம் ஆகும்.
இரண்டாவது எழுத்து
குறியீட்டின் 2வது எழுத்தானது “D” என இருந்தால் அந்த ரயில் டீசலில் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.
குறியீட்டின் 2வது எழுத்து “A” ஆக இருந்தால் அது மின்சாரத்தில் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.
மூன்றாவது எழுத்து
குறியீட்டின் 3- வது எழுத்தான “P” என்பது பயணிகள் ரயில் என்று அர்த்தமாகும்.
ஒரு வேளை 3-வது எழுத்து “G” ஆக இருந்தால் அது சரக்கு ரயில் என்றும்
“M” என்று இருந்தால் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் எனவும்
“R” ஆக இருந்தால் கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் என்பதை குறிக்கும்.
சில ரயில்களில் ‘3A’, ‘4B’ என இருக்கும். இது அந்த ரயில் என்ஜினின் ஹாட்ஸ் பவரை குறிக்கிறது. இதில் மூன்று என்பது மூவாயிரம் என்பதையும் A என்பது 100 என்பதையும் குறிக்கிறது.
அதாவது ‘3A’ என்றால் அந்த ரயிலானது 3100 ஹார்ஸ் பவரை கொண்டது என்று அர்த்தமாகும். ஒருவேளை ‘4D’ என இருப்பின் அது 4400 ஹார்ஸ் பவரை கொண்டது என்று அர்த்தமாகும்!
ஹார்ஸ் பவர் என்றால் குதிரைத் திறன் என்று அர்த்தம். அதாவது 3A என்ஜின் என்பது 3100 குதிரைகளைக் கட்டி இழுக்கும் அளவுக்கு ஆற்றலை வழங்கக் கூடியது.
இப்போது ரயிலின் ஆற்றலும் ரகசியங்களும் உங்களுக்குப் புரிந்திருக்கும்தானே!
மறுமொழி இடவும்