‘லஞ்ச ஒழிப்பு வாரம்’ எனக் கொட்டை எழுத்தில் எழுதி பேனரைப் பிடித்துக் கொண்டு வீதி வீதியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றது அந்த ஊர்வலம்.
லஞ்சத்தை ஒழிப்போம்!
அன்பளிப்பு என்கிற பெயரில் லஞ்சம் வாங்காதே!
லஞ்சம் கொடுக்காதே!
லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் தலைவர் மாசிலாமணி உரத்த குரலில் முழங்க, இயக்கத்தின் தொண்டர்கள் அவர் கூறியதை அப்படியே திருப்பி முழங்கினார்கள்.
மதியம் ஒருமணி அளவில் வீடு திரும்பிய மாசிலாமணியிடம் அவர் மனைவி கூறினார்.
“மிலிட்டரியிலிருக்கிற நம்ம பையன் இரண்டாயிரம் ரூபாய் மணியார்டர் அனுப்பியிருக்கான். போஸ்ட்மேன் வந்து உங்களைத் தேடினார். இரண்டு மணிக்கு வர்றதா சொல்லிட்டுப் போயிருக்கிறார்.”
மாசிலாமணி சாப்பிட்டு முடித்து வெளியே வர, போஸ்ட்மேன் கேட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
மாசிலாமணியிடம் கையெழுத்து வாங்கி இரண்டாயிரம் ரூபாயை எண்ணிக் கொடுத்துவிட்டு அங்கேயே நிற்க, மாசிலாமணி புரிந்து கொண்டார்.
பத்து ரூபாய் நோட்டு ஒன்று கைமாறியது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998